Skip to content

நான்காவது தூண் – நூல் விமர்சனம் (சிபியிலும்)

August 28, 2007

http://tamil.sify.com/art/fullstory.php?id=14517561

நான்காவது தூண் – மதுமிதா

– புத்தக விமர்சனம்

“உழைப்பு தான் உன்னை உயர்த்தும் குமாரு. சும்மா நெருப்பு மாதிரி வேலை செய்யனும்” – புதுப்பேட்டை திரைப்படத்தின் வசனம் இது. மதுமிதா அவர்கள் சந்தித்து உரையாடி இருக்கும் பத்திரிக்கையாளர்கள், தங்களுக்கே உரிய பாணியில், வேறு வேறு தளங்களில், தெளிவுரைகளில் இதே கருத்தினை இந்த புத்தகத்தில் உணர்த்தியுள்ளார்கள். தேசத்தின் நான்காவது தூணாக செயல்படும் பத்திரிக்கை உலகில் தங்களுக்கான இடங்களை பிடித்து, தக்கவைக்த்துக்கொண்டு வேகமாக செயல்படும் பதினெட்டு பத்திரிக்கையாளர்களின் நேர்காணல்களே இவை அனைத்தும்.

மனச்சோர்வான ஓர் மாலைப ்பொழுதில் லேனா தமிழ்வாணனின் நேர்காணலை படிக்க நேர்ந்தது. அவருடைய அப்பா தமிழ்வாணனை பற்றி குறிப்பிடும் போது “எந்த ஒரு பிரச்சனைக்கு அசர்றதே இல்ல. பாத்துருவோம் அதன்னு சாதாரணமா நினைச்சாத்தான், நாம் விஸ்வரூபம் எடுத்தாத்தான் வெல்ல முடியும். பிரச்சனைக்கு விஸ்வரூபம் குடுத்துட்டோம்னா மனதளவுல அது நம்ம பாதிச்சிரும்ங்கறது உணர்வுபூர்வமான விஷயம்”. படிச்ச உடனே இது எனக்கான வாசகமா என்று தோன்றியது. நேர்காணல் முழுதும் நேர்மறை எண்ணங்கள் தூவி இருந்தது, அவரின் கட்டுரைகள் போலவே. லேனா தமிழ்வாணனை பற்றி மட்டுமல்லாமல் அவர் தந்தை தமிழ்வாணனை பற்றியும் நிறையவே அறிய முடிந்தது

எல்லா பத்திரிக்கையாளர்களிடமும் அதிசயித்த ஒரு விடயம், எல்லோரும் இளமைக்காலங்களில் ஏராளமான உழைப்பும், உயர்ந்த இலக்கும் உடையவர்களாக இருந்து இருக்கின்றார்கள். அதற்காக நீண்ட போராட்டத்தை நடத்தி இருக்கின்றார்கள். வெற்றி என்பது தூங்கி எழுந்ததமும் மறுநாள் காலை வீட்டு வாசலை தட்டுவதில்லை. எங்கே நாம் இளமையை வீணடிக்கின்றோமோ என்கின்ற எண்ணம் மேலோங்கும். Better late than never என்பதனையும் நிருபித்துவிடுகின்றார்கள். நடந்ததை பற்றி வருத்தப்பட்டு இனி ஏதும் மாறப்போவதில்லை, இனி நடப்பவை நல்லாதவும் உயர்வுள்ளதாகவும் இருக்கட்டும். பத்திர்ககையாளர்கள் என்பதால் பேட்டி கூட ஒரு கதை போல விறுவிறு என்று செல்கின்றது. தங்களுடைய இளமைக்கால்ங்கள், எங்கே பாதிப்பு ஏற்பட்டது. ஒரு சின்ன புத்தகம் எப்படி தங்கள் பத்திரிக்கை, இதழியில் தாகத்திற்கு வழிவகுத்தது என்பதனை படிக்க படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.

சோ அவர்களின் கடைசி விடை மனதை கொள்ளை கொண்டது. நல்ல பஞ்ச். கேள்வி பதிலில் சூரரிடம் கேள்வி கேட்பது எளிதல்ல.ஒரு கட்டுரையில் மதுமிதா எப்படி சோவிடம் கேள்வி கேட்டு அவர் கேள்வி முடிந்த அடுத்த நொடி பதில் வந்து திணறடித்த கதையை எங்கோ படித்த நியாபகம். நக்கீரன் கோபாலின் நேர்காணல் சுவாரஸ்யம். முக்கியமாக வீரப்பனை பற்றி விவரங்களும், அவனை சந்திக்க சென்ற அனுபவமும் மெய்சிலிர்க்க வைக்கின்றது. படித்து பட்டத்துடன் சென்னைக்கு வந்து, கடும் போராட்டங்கள் மத்தியில் உழைத்து, கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வேகமாக உயர்ந்து, கவனிக்கத்தக்க பத்திரிக்கை சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி இருக்கின்றார்.உண்மை பேசினால் நிறைய பிரச்சனைகள் வரும், ஆனால் தருமம் நிலைக்கும் என்பது இவர் வாழ்வில் நிதர்சன உண்மை.

மனுஷய்புத்திரன் உணர்வுகள்அழகாக கண் முன்னே.எழுத்துலகிற்கு பிரவேசம், புத்தகங்களின் மீது நேசம், 16 வயதில் தரமான கவிதை நூல், உயிர்மை தோற்றம், அதன் கனவுகள் என்று இவரின் நேர்காணல் விரிகின்றது. இரண்டாம் மூன்றாம் தலைமுறை பத்திரிக்கையாளர்களின் எண்ணிக்கை இந்த பதினெட்டில் அதிகமாக உள்ளது.

நேர்காணல்கள் அவரவர் மொழியிலேயே இருப்பதால் நேர்காணல்கள் ஒரே மாதிரி இல்லாமல் பல வடிவங்களில் பரிணமிக்கின்றது.ஒவ்வொரும் பத்திரிக்கையாளரை சந்திக்கும் முன்னர் நிறைய உழைத்திருக்க வேண்டும், மதுமிதாவின் கேள்விகள் அதனை நமக்கு உணர்த்துக்கின்றது.

அண்ணாகண்ணனிடம் இணையத்தில் தொடர்பு இருந்த போதும், இவரை பற்றி மதிப்பீடு பலமடங்கு உயர்ந்தது இவரின் சந்திப்பை படித்த உடன். “இந்த உலகிற்கு என் கொடை மிகப்பெரியதாக இருக்கும்” என்று துவங்குவதிலே அதனை புரிந்து கொள்ளலாம்.அனைவரின் இலக்குகளும் பாதைகளும் வாசகரின் இலக்குகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்தலாம். உட்படுத்தும்.

சுகதேவ் என்கின்ற பத்திரிக்கையாளரின் பேட்டி மிகவும் கவர்ந்து இழுத்தது. சமூகத்தின் மீதும் இளைஞர்களின் பாதை மீதும் அவரின் கருத்துக்கள் தெள்ளத்தெளிவாக இருந்ததன் காரணமாக இருக்கலாம். பகத்சிங்கின் நண்பனின் பெயரை கொண்டதன் காரணமாகவும் இருக்கலாம். உரைவீச்சு போலவே இருந்தது இந்த பேட்டி. ஒவ்வொரு கேள்விக்கும் அவர் அளித்திருக்கும் விடைகள் தனித்தனி கட்டுரைகள் போலவே இருந்தது.

இணைய இதழ்களின் ஆசிரியர்கள் மூவரை நேர்கண்டதற்கு பாராட்டுக்கள். இணையத்தில் இருப்பவர்களுக்கும் அச்சு உலகில் உள்ளவர்களுக்கு நிறைய வேறுபாடு உள்ளது. இணையத்தின் செயல்பாடுகளில் உள்ள சிரமங்களை நிலாவின் பேட்டி வெளிச்சமிட்டு காட்டியது. அந்த வகையில் அண்ணாகண்ணன், நிர்மலா ராஜு மற்றும் அருணா நேர்காணல்கள் இணைய உலகை நன்கு அறிமுகம் செய்து வைக்கின்றது.

இணையங்கள் பற்றி நிறைய பேசி இருக்கின்றார்கள். இணையம்பற்றி தெரிந்தவர்களுக்கு இதில் எந்த பிரச்சனையும் இருக்காது. எங்கேனும் ஒரு இடத்தில் இணணய இதழ் என்றால் என்ன? அதன் வடிவம் என்ன? மடற்குழு என்றால் என்ன? வலைப்பூ என்றால் என்ன என்று ஆசிரியர் விளக்கி இருக்கலாம். இந்த புத்தகத்தின் நோக்கம் அதுவாக இல்லை என்றாலும், இணையம் பற்றி பரிச்சயம் இல்லாத வாசகர்களுக்கு இது வசதியாக இருந்திருக்கும்.

சிறுவர்களின் கல்வி, இளம் பத்திரிக்கையாளர்களுக்கு உங்கள் கருத்து போன்ற கேள்விகளின் பதில்கள் வேறுவேறு விதமாக வெளிப்பட்டாலும் ஒரு நிலையில் அதே கேள்விகளை மீண்டும் மீண்டும் கண்டதால் சற்று சலிப்பை ஏற்படுத்திவிட்டது. இதே கேள்விகளை வேறுவிதமாகவும் எடுத்து சென்றிருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றியதை தவிர்க்கமுடியவில்லை.

சில சிறுபத்திரிக்கையாளர்களிடம் பேட்டி எடுத்திருக்கலாம். சிறுபத்திரிக்கை உலகமே வேறு. அவர்களின் சிரமங்கள், கவலைகள், போராட்டங்கள், செய்ல்பாடுகள், தியாகங்கள், உழைப்பு, சந்தோஷம் இந்த உலகிற்கு நிச்சயம் தெரியப்படுத்த வேண்டும். மதுமிதா அவர் குறிப்பிட்டிருக்கும் அடுத்த புத்தகத்தில் இவற்றை நிறைவு செய்வார் என்கின்ற நம்பிக்கை நிறையவே இருக்கின்றது.

ஒவ்வொரு புத்தகமும் தனக்கும் வாசகனுக்கும் ஒரு இனம் புரியாத நட்பினை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது. அது எப்போது மேலும் வலுப்பெரும் எனில் வாசகனின் எண்ணங்களை வளப்படுத்தும் போதும், அறிவார்ந்த தேடலுக்கு தீணி போடுவதாக இருந்தாலும். ஏதாவது ஒரு வாசகம்., அல்லது சம்பவம், அல்லது வரி அவனை நிறையவே யோசிக்க வைத்துவிடும். அந்த வகையில் இந்த புத்தகம் வாசகனை குலுக்கி எடுக்கும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றது.

எழுத்து துறையிலும் பத்திரிக்கை துறையிலும் நாட்டம் இருப்பவர்களுக்கு நல்ல களஞ்சியமாக இந்த “நான்காவது தூண்” விளங்கும். மென்மேலும் புதிய புத்தகங்கள் படைக்க இணைய நண்பர் மதுமிதாவிற்கு வாழ்த்துக்கள்.

புத்தகத்தின் பெயர் – “நான்காவது தூண்”
(18 தமிழ் பத்திரிக்கை ஆசிரியர்களின் நேர்காணல்கள்)
ஆசிரியர் – மதுமிதா
பதிப்பகம் – ஸ்ரீ விஜயம் பதிப்பகம்
10, பாலு தெரு, திருவான்மியூர்
சென்னை – 600 041
தொலைபேசி – 24422433

நன்றி tamil.sify.com

– விழியன்

KeyWords: Book Review, நான்காவது தூண்.

11 Comments leave one →
  1. August 28, 2007 8:14 am

    Note panni vachukuren nanba… padichidalam…

  2. selva permalink
    August 28, 2007 8:17 am

    By see this title i thought….
    We are worked for Thrid pillar only… and u named ur story as Fourth pillar… after read this article only i came to know this is about a book…. very good… keep it up… – Selva.. Salem Selva

  3. August 28, 2007 8:22 am

    ezhuthil ezhucchi…vetriyin vilimbu

  4. August 28, 2007 8:23 am

    ezhuthil ezhucchi…vetriyin vilimbu…
    …everest thottu vidum thooramdhaan
    ….ezhugavee padaigal ezhugave…

  5. shanv permalink
    August 28, 2007 8:50 am

    Interesting review…
    Indha book -a padichu pakkalam…

  6. Senthilkumar permalink
    August 28, 2007 9:00 am

    Nalla ezuthi irukkinga….

  7. Manickam permalink
    August 28, 2007 12:34 pm

    good review na… I will try to read this book… (I feel its written for me only…thats why)

  8. August 29, 2007 3:32 am

    நன்றி விழியன் நல்லதொரு வாசிப்பனுபவத்திற்கு.
    நிதானமாக வாசித்து உள்வாங்கிக் கொண்டு எழுதியிருக்கிறீர்கள்.

    சோ குறித்து நான் கூறியது தமிழோவியம் இணைய இதழ் நேர்காணலில் கொஞ்சம் வந்துள்ளது. இந்த எட்டு மாத உழைப்பு எனக்களித்தது பதினைந்து வருட கால அனுபவத்தை. அனுபவம் செதுக்கியிருக்கிறது என்னை, ‘மேக்கிங் ஆப் நான்காவது தூண்’ என்று மேலும் இரு முழு நூல் படைக்குமளவுக்கு:-)

    தேவையென கருதியே, நேர்காணலில் அனைவருமே பத்திரிகை ஆசிரியர்கள் என்பதாலேயே, அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் சில
    பொதுவான கேள்விகள் வைத்தது, இனி வரும் இளம் பத்திரிகையாளர்களுக்கு உபயோகமாக இருக்க வேண்டுமென்று. முன்னுரையில் இதையும் குறிப்பிட்டிருந்திருக்க வேண்டும்.

    நீங்கள் உணர்ந்ததுபோல் பல இடங்கள் வாசிக்கையில் உள்ளம் தொட்டு புது உலகுக்கு எடுத்துச் செல்லும் என்ற நம்பிக்கையில் எடிட் செய்கையில் சில இடங்களை அப்படியே அதன் ப்ளோவில் விட்டிருக்கிறேன்.

    எண்ணற்ற பத்திரிகையாளர்கள் தங்களின் வாழ்க்கையை இதிலேயே தொலைத்துமிருக்கிறார்கள். அனைத்தையும் பதிவு செய்ய முயன்றதின் சிறுதுளியே இந்நூல்.

    ஒரு இலக்கு தெரிந்தது. இலக்கைச் சேரும் வழி தானே கண்களுக்குப் புலப்பட, சிரமம் பாராது பாதை இட்டுச் செல்லும் விளைவுகளுக்கு அஞ்சாது, ஒற்றையடிப்பாதை போடப்பட்டிருக்கிறது. அவ்வளவே. அங்கு செல்வதற்கான பாதை இது என்று மட்டுமே காட்ட இயலும். பாதையை சீராக்குவது, பயணத்திற்கான வசதிகள் செய்வது என்பதை சிறப்பை உணரும் யாரேனும் தொடர்வார்கள். ஆரம்பம் மட்டுமே நம் கையில்.

    இன்னும் நிறையவே இருக்கிறது விழியன் சொல்வதற்கு. நேரம் இருக்கும்போது பார்க்கலாம்.

    அன்புடன்
    மதுமிதா

  9. August 29, 2007 3:47 am

    இந்த லிங்க் கொடுக்க மறந்துவிட்டேன் விழியன்
    http://muthukamalam.com/muthukamalam_puthakaparvai4.htm

  10. நவீன் permalink
    August 29, 2007 10:03 am

    தெளிவான விமர்சனம். எழுத்தாளர்களுடன் நேர்காணல் என்பதே மிகுந்த ஆர்வத்தை தூண்டுகிறது .
    அறிமுகப்படுத்தியதற்கு நன்றி விழியன்.

  11. Devamaindhan permalink
    September 16, 2007 6:30 am

    UNICODE TAMIL:
    நல்ல மதிப்புரை. மதுமிதா மொழியாக்கமான ‘சுபாஷித’த்தின் மதிப்புரையாளன் என்ற முறையில் இந்த மதிப்புரையை ஈடுபாட்டுடன் வாசித்தேன். பாராட்டுகள்!
    தேவமைந்தன்

Leave a comment