Skip to content

அப்பார்ட்மெண்ட் வாழ்வும் அவசர உலகமும்

November 16, 2010

காலை ஏழு மணிக்கு குழலிக்கு அவள் புத்தகத்தில் படங்கள் காட்டி ஏதோ சொல்லிக்கொடுத்தபடி இருந்தேன். கீழ் வீட்டு அம்மா பதற்றத்துடன் வந்து மனைவியை அழைத்தார்கள். “அம்மா மூச்சு பேச்சு இல்லாம இருக்காங்க, கொஞ்சம் வந்து பாரும்மா” என்றார்கள்.  அந்த அம்மாவின் பதற்றத்திலேயே ஏதோ நிகழக்கூடாதது நிகழ்ந்துவிட்டது என புரிந்தது.

அடுக்குமாடி குடியிருப்பில் குடிபுகுந்து சுமார் மூன்று மாதமாகிவிட்டது. எங்கள் இருப்பின் கீழே உள்ள ப்ளாட்டில் இருக்கின்றார்கள் அந்த அம்மா. மகன் & மருமகள் வெளிநாட்டிற்கு சென்றிருக்கின்றார்கள். அந்த பாட்டியின் வயது எண்பதை தாண்டி இருக்கும். அம்மா அந்த பாட்டி பற்றி நிறைய சொல்லி இருக்கின்றார்கள். தன் மகள் வீட்டிலேயே பணம் கொடுத்து தங்குகின்றார்கள், மகன்கள் இருந்தும் மகள் வீட்டில் இருக்கின்றார்கள். சில விவாதமும் இதன் மீது நடந்ததுண்டு. ஆனால் அந்த பாட்டியை நான் பார்த்ததே இல்லை.

வீட்டிற்குள் நுழைந்து கடைசி அறைக்கு எங்களை அழைத்து சென்றார்கள். முதலில் மனைவி அந்த பாட்டியின் உடலை தொட்டு பார்த்தாள். போய்விட்டது என்பது போல என்னை நோக்கினாள். கை மணிக்கட்டை பிடித்து பார்த்தேன், மிக லேசாக துடிப்பு இருந்தது. ஒரு முகைநரண், இந்த பாட்டியை முதல் முறை பார்க்கும் போதே அவர்கள் உயிர் உடலில் இல்லை.  கை கால்கள் சில்லென இருந்தது. தலையில் லேசான சூடு. மனைவி வயிற்றில் லேசாக அழுத்தி பார்த்தாள். வாயிலிருந்து உமிழ் நீர். இருவரும் முகத்தை பார்த்து தலை அசைத்துக்கொண்டோம்.

மருத்துவர் ஒருவர் உறுதி செய்தால், ஊருக்கு எடுத்து சென்றுவிடலாம் என்றார்கள். சரி மருத்துவர் எவரேனும் கிடைக்கின்றார்களா என வண்டி எடுத்து கிளம்பினேன். கடைகளில் விசாரிக்க கை நீட்டியது ஒரே ஒரு மருத்துவரை. அவர் வீட்டிற்கு சென்று நிலைமையினை சொல்ல, “மகளை பள்ளியில் விடனும், நேரம் இல்லை. பெட்டர் இராமச்சந்திரா எடுத்துட்டு போயிடுங்க. அவங்க கன்பார்ம் செய்துவிடுவார்கள்” என்றார். மற்றொரு மருத்துவர் வீட்டில் இல்லை. என்ன செய்வது என தெரியாமல் மீண்டும் வீடு வந்தேன். நிறைய நீர் வாய்வழியே வழிந்திருந்தது. அதற்குள் ஓட்டுனர் ஒருவரை வரவழைத்து இருந்தனர். காரில் மருத்துவமனை வரை சென்று, உறுதி செய்த பின்னர் ஆம்புலன்ஸில் தேனிக்கு அழைத்து செல்வதென ஏற்பாடு. எந்த மருத்துவமனை என சில நேரம் குழப்பம் நீடித்தது. சில வாரங்கள் முன்னர் அந்த பாட்டியின் மருமகன் கீழே விழுந்து கை பிசகியதற்கு சுமார் 1.5 லட்சம் பிடுங்கியது போரூரில் புகழ்பெற்ற மருத்துவமனை.

முதல் மாடியில் இருந்து உடலை இறக்க வேண்டும். நான் , ஓட்டுனர் மட்டுமே இருந்தோம். இருவரும் எளிதாக இறக்கிவிடலாம் என நினைத்தேன். சுமார் ஒரு மணி நேரத்தில் கணமாகிவிட்டிருந்தது உடல். கீழ் வீட்டில் இருந்த மாமா ஒருவரும் உதவிக்கு வந்தார். மிகுந்த சிரமப்பட்டு காரில் ஏற்றினோம். பாட்டியின் வாயிலிருந்து வழிந்த நீர் பேண்ட் எங்கும் நனைத்து இருந்தது. பாட்டியின் மகள் அம்மா அம்மா என அழுதது தொண்டையை அடைத்தது. பதட்டப்படாதீங்க என அவரை சமாதானம் செய்து வண்டியை கிளப்பி அனுப்பி வைத்தோம். இரண்டு வயதானவர்கள் பாவம் என்ன செய்வார்கள் என்று மனம் வருந்தியது.

சிறிது நேரத்தில் அந்த அம்மா என்னை அலைபேசியில் அழைத்து காலை செய்த உதவிக்கு நன்றி என்றார்கள். உறுதி செய்துவிட்டார்கள், தேனிக்கு எடுத்து சொல்கிறோம். வீட்டை பார்த்துக்கோங்க என்று கூறி அணைத்துவிட்டார். வீட்டின் எல்லை வரை மட்டுமே உதவ முடிந்தது என்ற குற்ற உணர்வு மேலும் அதிகரித்தது.

அடுத்த வீட்டு நபர்களை கூட அறிமுகம் படுத்திக்கொள்ள முடியாத அவசர உலகில் வாழ்கின்றோம் நாம். பத்து நிமிடம் ஒதுக்கி ஒரு பதற்றத்தை நீக்கும் அளவிற்கு நேரமில்லாம ஓடுகின்றார்கள் மனிதர்கள். மரணம் என கேள்விப்பட்டும் தன் வேலை முக்கியம் என நகர்கின்றோம். எந்த சலனமும் நிகழ்வதில்லை நமக்குள்.

கிராமங்கள் மற்றும் சொந்த ஊரின் வேர்கள் அறுந்த நிலையில் ஒரு நாள் நான் மரிக்கும் போது, ஏதாவது ஒரு எண்ணிற்கு அழைத்து “Father dead, Dispose him” என்ற நிலையும் வரலாம்.

– விழியன்

21 Comments leave one →
  1. November 16, 2010 8:10 am

    சரியான நேரத்தில் உதவி செய்திருக்கிறீர்கள் .
    வரும்காலத்தில் எஸ்எம்எஸ் வழியாகத்தான் திருமணங்கள், விவகரத்துக்களும் நடைபெறப்போகின்றன.

    உங்கள் கொள்ளுபேத்தி பிறந்த நாள் ரோபோக்கள் புடைசூழ, நீங்கள் வெப்காம் வழியாக பரவசமடைய கொண்டாடும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

  2. Raveendran permalink
    November 16, 2010 8:10 am

    So sad… 😦

    Seriously… we have to think and spend sometime with neighbours…

  3. November 16, 2010 8:20 am

    கிராமங்கள் மற்றும் சொந்த ஊரின் வேர்கள் அறுந்த நிலையில் ஒரு நாள் நான் மரிக்கும் போது, ஏதாவது ஒரு எண்ணிற்கு அழைத்து “Father dead, Dispose him” என்ற நிலையும் வரலாம்

    இதற்காகவே ஒரு நிறுவனம் போட்டு இயங்கவும் செய்யலாம்.
    அவர்கள் வீடுவீடாக கேன்வாசிங்கும் வரலாம்

  4. November 16, 2010 8:28 am

    இப்பவே, இறந்தவர் வீட்டில் வீடியோ எடுத்து வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைக்கு அனுப்புவது எல்லாம் நடக்கிறது…

  5. November 16, 2010 8:42 am

    அண்ணா,

    என்னுள் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை இந்நிகழ்வு… நீங்கள் சொல்லியது போல ஒரு நாள் “Father dead, Dispose him” கன்டிப்பாக வரும்… அந்த நாளும் வெகுதொலைவில் இல்லை என்பதே நிஜம்.

    இவ்விஷயங்களில் பிரச்சினை எனப் பார்த்தால் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு புலம்பெயர்ந்தவர்களுக்கே அதிகம். கிராமத்தில் வாழ்ந்து இறப்பவர்களுக்கும், நகரத்தில் வாழ்ந்து இறப்பவர்களுக்கும் ஈமக்கிரியை அவர்கள் வாழும் இடத்திலேயே நடத்தப்படுவதால் ஓரளவு பிரச்சினை குறைவு…

    இன்னும் நிறைய இருக்கிறது இதைப்பற்றிப் பேச… பேசுவதால் மாறாத பிர்ச்சினைகள் இவை…

    • November 16, 2010 8:48 am

      நன்றி பிரசாத். ஒரு நிகழ்வு எல்லோருக்கும் ஒரே போன்ற தாக்கத்தை ஏற்படுத்தாது என்பது உண்மையே.

      கிராமத்திற்கு அல்லது சொந்த ஊருக்கு எடுத்து செல்வது, ஈமக்கிரியை செய்வதற்கு மட்டும் அல்ல, சொந்தங்களும் நட்புகளும் அங்கே தான் நிறைய இருக்கும். அவர்கள் இங்கே வருவதில் சிரமம் அதிகம். இங்கே தோள் கொடுக்க ஆட்கள் குறைவு என்பது மறுக்க முடியாத உண்மை.

      பேச வேண்டும் பிரசாத், அப்ப தான் நாம் எங்க இருக்கோம்னு தெரியும்.

  6. ரமணன் permalink
    November 16, 2010 12:41 pm

    வருந்தத்தக்க உண்மையைப் பதிவுசெய்திருக்கிறாய். உண்மையில், இன்றும் கூட இதுவே கிராமமாயிருந்தால் இந்த அவலம் தவிர்க்கப்பட்டிருக்கும். அங்கே இன்னும் உன்னைப்போன்ற மகன்கள் இருக்கிறார்கள்.

    ரமணன்

  7. Evano oruvan permalink
    November 16, 2010 12:47 pm

    Hope its just dramtic story. Just to cover the peoples

  8. November 16, 2010 3:21 pm

    நிகழ்வை உணர வைத்த எழுத்துகள் ……..

  9. Parameswary permalink
    November 16, 2010 3:35 pm

    ம்ம்ம்.. சில நிமிடங்களாக எப்படி எழுதுவது என தெரியாமல் மடிகணினியை வெரித்துப்பார்துக் கொண்டிருந்தேன்.
    எவ்வளவு பெயர் , பணம் , சொத்துக்களை நாம் சம்பாரித்தாலும், நமது பிரியமுடையவர்களை பிரிந்த பிறகு அவர்களுடன் இன்னும் சில நாள், மணி நேரம், நிமிடம், வினாடிகள் ஏன் சில நொடிகளை நாம் செல வழித்திருக்க வேண்டும் என தோன்றும். பெரிய இழைப்பை சந்தித்த பிறகு ஏன் எங்களுக்கு இப்படி என இன்னும் வினவி கொண்டிருக்கின்றேன்.
    அந்த பாட்டியின் பிள்ளைகள் இப்பொழுதாவது அவர்களை நினைத்து உருகுவார்கள் என நினைக்கின்றேன்.
    “Father dead, Dispose him”
    இந்த கொடூரம் யாருக்கும் வர கூடாது என வேண்டுகின்றேன்.

  10. k.s.வெங்கடேசன permalink
    November 16, 2010 7:03 pm

    நன்றி

  11. k.s.வெங்கடேசன permalink
    November 16, 2010 7:04 pm

    இந்த கொடூரம் யாருக்கும் வர கூடாது

  12. மாணிக்கம் permalink
    November 17, 2010 3:16 am

    அதென்னவோ… நமக்கு இந்த குறுகிய கால அதிவேக பரிணாம வளர்ச்சியை சரியாக புரிந்துகொள்ள சரியான திராணி இல்லை… உயர் படிப்புகள் கொடுத்த புதிய வகை மூட நம்பிக்கை (I’m bit busy!!!)… இயந்திரங்களோடு பழகி பழகி, எந்திர இதயமாகி போனது…

    நாம் உம்மை பெருமைப் படுகிறோம் விழியா… (நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யென பெய்யும் மழை…!!!)

    உலகம் அதன் அச்சில் இயங்கத்தானே வேண்டும்…

    உங்கள் நன்பயணம் தொடர வாழ்த்துக்கள்…

    -மாணிக்கம்.

  13. November 17, 2010 3:39 am

    ஆமாம். விழியன். நீங்கள் சொல்வது உண்மைதான். மனிதநேயம் இருந்தும் கூட மற்றவர்களுக்கு உதவ முடியாத அவசரச் சூழலில்தான் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், அந்த டாக்டர் வர இயலாது என்று சொன்னதைப் போல. ஆனால் மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பதும் உண்மை. நெகிழ வைத்த கட்டுரை.

  14. அன்பு permalink
    November 17, 2010 7:12 am

    மிகவும் உண்மை.
    ஆறு மாதங்களாக ஒரு வீட்டில் தங்கியிருக்கிறேன். எனினும் பக்கத்து வீட்டில் இருப்பவர்களுடன் ஒரு நாள்கூட பேசியது இல்லை என உணரும்போது வலிக்கத்தான் செய்கிறது.

    //“Father dead, Dispose him” //
    இந்த நிலை வருவதற்குள் நாமெல்லாம் திருந்திவிடுவோம் என நம்புகிறேன்

  15. selvaraj permalink
    November 17, 2010 11:39 am

    மிகவும் வருத்தமான விஷயம். இதை அனைவர்க்கும் புரியவைததுக்கு மிக்க நன்றி.

  16. November 17, 2010 4:40 pm

    yeah very true.. but the last line is very punchy and powerful!

    hope we would NOT reach that situation and people should think and act!!

  17. sakthi permalink
    November 19, 2010 6:31 am

    I didn’t feel anything when u sms me. Bcoz i didn’t know who she was & I have not even informed to my mom & buna too.

    But your words explained the situtation.

  18. Thamizhamudhu permalink
    November 29, 2010 3:19 pm

    nagara vaazhkai endra peyaril tholaindhu poi kondirukkum naam, naalai namadhu maranamum ippadi dhaan nadakumo endru ninaithu paarthaaal… kandippaaga samudhaaya uravugalai ‘Idiotic sentiments!!’ endru alatchiyamaaga koora maattom. Best post na!! A big salute for ur pen!!!

  19. sahul permalink
    January 3, 2011 6:18 pm

    realy very nice

Leave a comment