Skip to content

லீவு – கவிதை

November 17, 2011

பள்ளியில் சேர்ந்துவிட்டதாக
கற்பனை உலகில் நடமாடுகின்றாள்

அருகே அமரும் நண்பர்களின் பெயர்கள்
டீச்சர் அடி கொடுப்பார்கள்
… பள்ளியில் ஆடும் ஆட்டங்கள்
அன்று படித்த பாடங்களென
அடித்து ஆடுகின்றாள்

அலைபேசியில் தன் தோழியிடம்
பள்ளியில் நடந்தவைகளை விவரிக்கின்றாள்
“ஆமாம்டீ..”

நானும் அப்பாவும் அலுவலகம் கிளம்பும்போது
அவசர அவசரமாக
“அம்மா யூனிபார்ம் தாங்கம்மா..”
சாப்பாடு, புத்தகம், கையில் கிடைப்பதை
பையில் போட்டு வெளிவருகின்றாள்

வானத்தை பார்த்து
“இன்னிக்கு மழை ஸ்கூல் லீவு” யென
உள்ளே போகின்றாள்

இப்படியாக பள்ளிக்கு
தினம் தினம்
புதிய காரணங்களுடன்
லீவு விட்டுக்கொள்கிறாள்

– விழியன்
(07/11/2011)

One Comment leave one →
  1. Sashidharan V permalink
    November 17, 2011 5:44 pm

    உங்கள் நடையில் சொல்வதானால் – குழந்தைக்கென்ன காரணமா கிடைக்காது – பள்ளி விடுமுறை விட 🙂

Leave a comment