Skip to content

ஆசிரியர் என்பவர் வெறும் ஒன்றும் ஒன்றும் ரெண்டு என கற்றுக்கொடுப்பவரா? – விழியன்

February 6, 2020

ஆசிரியர் என்பவர் வெறும் ஒன்றும் ஒன்றும் ரெண்டு என கற்றுக்கொடுப்பவரா? – விழியன்

கீழே இருக்கும் வாட்ஸப் பார்வர்ட் வைரலாக ஆசிரியர்கள் மத்தியில் பரவி வருகின்றது. ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுக்கான எதிர்ப்புக் குரல் ஆசிரியர்கள் எழுப்பத்தேவையில்லை என்பதே அதன் சாராம்சம். NCFன் (National Curriculum Framework) முதல் பக்கத்திலேயே ஒரு வரி வரும். ஒரு தேசத்தின் உயரித்தினை நிர்ணயிப்பவர்கள் ஆசிரியர்கள். அவ்வளவு பொறுப்புமிக்கவர்கள். சமூகத்தில் வேறு எவரை விடமும் மிகமிக உயரிய பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஆசிரியர்கள். அவர்களே அடுத்த தலைமுறையினரை கட்டமைக்கின்றார்கள். அவர்களே பெற்றோர்களை விடவும் அதிக நேரம் குழந்தைகளுடன் செலவிடுகின்றனர். அவரக்ளுக்கு தான் நிச்சயம் எது குழந்தைக்கு நல்லது எது சரிவராது எனத் தெரியும். தேவையில்லாத பாரத்தை பிஞ்சுகளின் மீது வைக்கும்போது அவர்கள் என்ன இன்னல்களுக்கு ஆளாவார்கள் என ஆசிரியர்களுக்கே அதிகம் தெரியும், தெரிய வேண்டும். இது மாணவர்களின் திறனை அறிய அல்ல ஆசிரியர்களின் திறனை அறிய என்று ஒரு வரியை சேர்த்து ஆசிரியர்களை அமைதியாக்க முயல்கின்றார்கள். எது சரி எது தவறு என பேசவாவது செய்ய வேண்டிய கடமை ஆசிரியர்களுடையது. சரி இப்படி வைத்துக்கொள்வோம், மாணவர்களின் திறன் விரும்பிய அளவிற்கு இல்லையெனில் ஆசிரியர்களின் வேலைக்கு சிக்கல் எனில் சும்மா விட்டுவிடலாமா? மூன்று ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சிக்கு உத்திரவாதம் அளித்திருப்பதையும் நம்பிக்கொண்டு இருக்கின்றோம்.

இன்னும் இன்னும் எத்தனை ஆசிரியர்கள் வீடுவீடாக சென்று ஸ்கூலுக்கு வாங்கடா ஸ்கூலுக்கு வாங்கடா என அழைத்து வந்துகொண்டு இருக்கின்றார்கள். தேர்வு என்ற ஒற்றை வார்த்தை அவர்களை ஓடச்செய்துவிடாதா? பொதுமக்கள், பெற்றோர்கள், இன்னும் சொல்லப்போனால் அரசியல் கட்சிகளிடம் இருந்து ஒலி காத்திரமாக வரவேண்டும் ஆனால் அதனை விட அன்பான ஒலி ஆசிரியர்களிடம் இருந்து ஒலிக்க வேண்டும், ஓய்ந்துவிடாதீர்கள் ஆசிரிய சமூகமே. மெளனத்தை களையுங்கள்.

ஒன்றும் ஒன்றும் ரெண்டு என மட்டும் கற்றுக்கொடுப்பவர்கள் ஆசிரியர்கள் அல்ல. ஒன்றும் ஒன்றும் ஏன் மூன்றல்ல, ஏன் ஒன்றும் ஒன்றும் இரண்டென்று கற்றுக்கொள்ள வேண்டும், ஒன்றும் ஒன்றும் எப்படி 10 என டிஜிட்டலில் மாறுகின்றது என்பதையும் கற்றுத்தரவேண்டும். ஒன்றும் ஒன்றும் இரண்டென குழந்தை கற்கவிடாமல் தடுக்கப்படும்போதும் குரல் கொடுக்க வேண்டியதும் ஆசிரியர் தான்.

– விழியன்

Whatsapp Forward
ஒரு சந்தேகம்,
5,8 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு வைப்பதில் ஆசிரியர்களுக்கு ஏன் இவ்வளவு வேதனை. கோபம்
முதலாம் வகுப்புக்கு வேண்டுமானாலும் பொது தேர்வு வைக்கட்டும். நாம் சிறப்பாக கற்றுக்கொடுப்பது நம் கடமை அதனை சிறப்பாக செய்வோம். அது போதும் பெற்றோரும், பொதுமக்களும்தான் பொதுதேர்வுக்கு கலவைபடனும் ஆனால் அவர்கள் யாரும் துளி கூட கவலைபடவில்லை, வருத்தப்படவும் இல்லை. பின் ஏன் ஆசிரியர்கள் இதனை இப்படி பிரச்சினை ஆக்குகிறீர்கள், போராடுகிறீர்கள்… ஆசிரியர்கள் பொது தேர்வை எதிர்பதனால் பெற்றோரும் பொதுமக்களும் ஆசிரியர்கள் ஒழுங்காக பாடங்களை நடத்தவில்லை எனவே அவர்கள் இதனை எதிர்கிறார்கள் என கூறுகின்றனர்..

One Comment leave one →
  1. August 2, 2020 1:23 pm

    //இன்னும் இன்னும் எத்தனை ஆசிரியர்கள் வீடுவீடாக சென்று ஸ்கூலுக்கு வாங்கடா ஸ்கூலுக்கு வாங்கடா என அழைத்து வந்துகொண்டு இருக்கின்றார்கள்// விழியன் இது தவறு முன்பை விட இப்போதுதான் அதிகமாக பெற்றோருடன் தொடர்பில் உள்ளனர் ஆசிரியர்கள். ஒவ்வொரு பெற்றோரின் கைபேசி எண்ணும் ஆசிரியரிடம் உள்ளது. ஒவ்வோர்ஆண்டும் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் ஏராளமான உபரிஆசிரியர்கள் கணக்கில் உள்ளனர். அதனால் தூரமாக இருந்தாலும் ஆசிரியர்கள் சொந்த செலவில் ஆட்டோ வைத்து அழைத்து வருவதை சென்னையில் பார்க்கிறேன். ஒரு நாள் வராவிட்டாலும் வேறு பள்ளியில் சேர்ந்து விட்டானோ ( வேறு பள்ளிக்கு மாறா டிசி வாங்க தேவை இல்லை) என்று பதட்டப் படுபவர், சில சமயங்களில் சலுகைகல் தந்து தங்கள் பள்ளியில் சேர்த்து விடுவர். இரண்டு தலைமை ஆசிர்யர்களும் சண்டைகூட போட்டுக் கொள்வர். இதற்கு பஞ்சாயத்து செய்த அனுபவமும் உண்டு. இது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சென்னப் பகுதிகளில் நடைபெறும் நிகழ்வாகும். முன்பெல்லாம் மாற்றுத் திறனாளிகளை(குறிப்பாக எம்.ஆர். குழந்தைகள்0 பள்ளிகளில் சேர்ப்பதை தவிர்ப்பர். இப்போது சேர்த்துக் கொள்வதோடு அன்பாகவும் பார்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் ஒரே ஒரு வார்த்தை எழுதவைத்ததும் பெருமிதம் கொள்வார்கள்

Leave a comment